பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு சில சினிமா பட வாய்ப்புகள் வந்தாலும், தற்போது அவர் சரவணன் இயக்கும் ஒரு படத்தில் மட்டுமே ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதற்கிடையே, ஆரவ் தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், கதையை கூட கேட்காமல் சம்பளத்தை தான் முதலில் கேட்கிறாராம். அதுவும் சாதாரண சம்பளம் இல்லையாம், கோடிக்கு கிட்டே நெருக்கமாக உள்ள தொகையை தான் தனது சம்பளமாக கேட்கிறாராம். இதனால் ஆரவை அனுகும் தயாரிப்பாளர்கள், அலறியடித்துக் கொண்டு திரும்ப ஓடி வந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க உள்ள படத்தின் இயக்குநர் இளன், முதலில் ஆரவை தான் இந்த படத்தில் கமிட் பண்ண முடிவு செய்திருந்தாராம். ஆனால், ஆரவ் சம்பளத்தை அதிகமாக கேட்டதால் அவரை நிராகரித்துவிட்டு ஹரிஷ் கல்யாணை ஒப்பந்தம் செய்தார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...