உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர்.
அப்படிப்பட்ட ஜாக்கிசான் நடித்து எந்த நாட்டில் படம் வெளியாகிறதோ அந்தநாட்டு மக்களின் பிராந்திய மொழிகளில் மொழி மாற்றுப் படமாக உருவாக்கி படத்தைக் கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள்.
அவ்வகையில் தமிழில் இதைக் கொண்டு வருகிறது ஒயிட் பாக்ஸ் நிறுவனம். 'தி பாரினர் ' என்று பெயர் இருந்தாலும் இப்படத்தில் ஜாக்கிசான் சென்னையைப் பற்றி லோக்கலாக வசனம் பேசுகிற காட்சிகளுக்கு தியேட்டரில் கை தட்டல்கள் கல கலக்கும். ஆரவாரம் அலையடிக்கும்.
ஜாக்கிசான் நடித்த மூலப்படமான ''தி பாரினர் '(The Foreigner)ஆங்கிலப்படம் அக்டோபர் 13 அன்று இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகத்தில் 150 திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆக்க்ஷன், சென்டி மென்ட் கலந்து தயாராகியிருக்கும் 'திபாரினர் 'படத்தில் ஜாக்கிசானுடன் மோதும் வில்லனாக பேஸ்பர்ஜான் நடித்திருக்கிறார்.
"வசூலில் சாதனை படைத்த ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு 'தி பாரினர்' நல்ல விருந்தாக இருக்கும்.' என்கிறார் ஒயிட் பாக்ஸ் ஸ்டுடியோ ரங்கநாதன்.
ஜேம்ஸ் பாண்ட் படமான 'கேசினோ ராயல்' படத்தை இயக்கியுள்ள மார்ட்டின் கேம்பக் இயக்கத்தில் தயாராகி உள்ள 'தி பாரினர்' தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஹாலிவுட் படமாக இருக்கும்” என்கிறார் ரங்கநாதன்.
ஒயிட் பாக்ஸ் ஸ்டுடியோ சார்பில் ரங்கநாதன் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ள இந்த 'தி பாரினர்' திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மதுரை மீனாட்சி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.ஞானோதயம் வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...