விஜயின் ‘மெர்சல்’ தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்து வரும் வெளிநாடுகளில் அதிக வசூலைப் பெற்ற படத்தின் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
அமீர் கானின் டங்கல், ஷாருக்கானின் ராயிஸ், பிரபாஸின் பாகுபலி ஆகிய படங்கள் வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூலித்திருந்த நிலையில், விஜயின் ‘மெர்சல்’ 12 நாட்களில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், 10 மில்லியன் டாலர் வெளிநாட்டு வசூல் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் மெர்சல் பெற்றுள்ளது.
இந்த நிலையில், படம் வெளியான 12 நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலை தொட்டிருக்கும் ‘மெர்சல்’ விரைவில் ரஜினின் எந்திரன் பட வசூலை மிஞ்சுவிடும் என்றும் கூறப்படுகிறது. எந்திரன் வெளியாகி 100 நாட்கள் ஓடிய பிறகே ரூ.280 கோடி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...