அஜித்தின் நல்ல மனது பற்றியும், அவர் பலருக்கு உதவி செய்தது பற்றியும் பலர் கூறி வரும் நிலையில், பிரபல இயக்குநர் ஒருவர் அவரை மோசமாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் வி.சி.குகுநாதன். இவர் தற்போது தனது 250 வது படத்தை எடுத்து வருகிறார். இவர் அஜித்தை வைத்து ‘மைனர் மாப்பிள்ளை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அப்படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய வி.சி.குநாதன், படப்பிடிப்பின் போது அஜித்தை மிகமோசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “மைனர் மாப்பிள்ளை படத்தை தொடர்ந்து ஒரு படம் செய்து தருவதாக அஜித் கூறினார், ஆனால் இதுவரை அவர் செய்யவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, மைனர் மாப்பிள்ளை படப்பிடிப்பின் போது மணிரத்னம் படத்தின் வேலைகள் இருக்கிறது செல்லலாமா என்று கேட்டார். நான் கொஞ்சம் கோபக்காரன், அப்போது அஜித்தை மிகவும் மோசமாக திட்டிவிட்டேன். அது அவருக்கு மன கஷ்டத்தை கொடுத்ததாக நடிகர் விவேக் மூலம் கேள்விபட்டேன்.
அஜித் உங்களை என் மகன் போல நினைத்தேன், உங்களை திட்டுவதற்கு எனக்கு உரிமை இல்லை என்று அவர் கூறமுடியாது, ஆனால் அவர் மிகவும் நல்லவர். கஷ்ட்டப்படுபவர்களுக்கு அவர் பல உதவிகளை செய்துள்ளார். அதுபோல் தமிழக மக்களுக்குமவர் உதவி செய்ய வேண்டும்.” என்றார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...