தன்னுடன் பணிபுரியும், பணிபுரியாத நடிகைகளை கலாய்ப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் ஆர்யா. கலாய்ப்பதில் மட்டும் அல்ல, கடலை போடுவதிலும் படி கில்லாடியான இவர், சமூக வலைதளங்களிலும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய நடிகை அமலா பால், அது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலாக, சாலை வரியை மிச்சப்படுத்தினால் படகில் போகலாம், என்று ஆர்யா கலாய்த்திருந்தார்.
உடனே அமலா பால் பதில் போட, அதற்கு ஆர்யா, “உனக்காக தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன். காதல் செய் அமலா” என்று பதிவு செய்திருந்தார்.
ஆர்யாவின் இந்த காதல் மேட்டர் தற்போது சமூக வலைதளத்தில் மட்டும் அல்லாமல், கோடம்பாக்கத்திலும் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...