சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகம் என்றும், பாலியல் தொல்லைகளால் தான் எப்படி பாதிக்கப்பட்டேன், என்பதையும் பல நடிகைகள் கூறி வரும் நிலையில், தற்போது நடிகை தமன்னாவும் இது குறித்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை தமன்னா அளித்த பேட்டி ஒன்றில், “சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான் இது எனக்கு தெரிந்தது. ஆனால் எனது வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வழியை பொறுத்து தான் நல்லதும் கெட்டதும் வருகின்றன என்பது எனது கருத்து.
2005-ம் ஆண்டு தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானேன். 12 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்து இப்போது வரை தவறான கண்ணோட்டத்தோடு என்னை யாரும் அணுகவில்லை. நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி இந்தி திரையுலகிலும் இருக்கிறது. சில நடிகைகள் அதை வெளியில் சொல்லி விடுகிறார்கள். இன்னும் சிலர் சொல்வது இல்லை.” என்றார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...