தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், சென்னையே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, விஜய் தனது வீட்டில் மது விருந்து வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி வசனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதோடு, அதற்கு பா.ஜ.க தெரிவித்த எதிர்ப்பு படத்திற்கு விளம்பரமாக மாறியது. இதனால் படம் அமோகமாக வசூல் செய்திருக்க, ஒட்டு மொத்த ‘மெர்சல்’ குழுவினரும் மகிழ்ச்சியில் தத்தளிகிறார்கள்.
இந்த நிலையில், ’மெர்சல்’ வெற்றியை கொண்டாட படக்குழுவினரை தனது வீட்டுக்கு அழைத்து நடிகர் விஜய் மெகா விருந்து ஒன்று கொடுத்துள்ளார். இதில் நாயகிகள் பங்கேற்கவில்லை என்றாலும், ஏ.ஆர்.ரஹ்மானு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விருந்தில் பங்கேற்றுள்ளனர். இந்த விருந்தில் படக்குழுவினருக்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர் கன மழையால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், விஜய் இப்படி விருந்து வைத்து தனது படத்தின் வெற்றியை கொண்டாடலாமா? என்று சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருவதால், விஜய் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மக்களுக்காக பேசுகிறேன், என்று சொல்லும் விஜய், மக்கள் துயரத்தில் இருக்கும் போது, இப்படி விருந்து வைப்பது சரியா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...