ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலுக்கு வர தயாராகி வரும் நிலையில், இதில் மக்களுக்கு ஆதரவு யாருக்கு அதிகம், என்று பலர் கருத்து கணிப்பு எடுத்து வருகின்றனர். மேலும், திரையுலகினர் பலர் அரசியல் என்று வந்தால், கமலுக்கு தான் ஆதரவு என்றும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர்களே கமல் தான் தமிழக முதல்வராக வர வேண்டும் என்று விரும்புவதாக, ரஜினி ரசிகர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்று கூறியுள்ளார்.
தி வீக் பத்திரிகை நடத்தும் ‘தி டவுன் ஹால்’ நிகழ்வில் கமல்ஹாசன் பங்குபெற்றார். இந்த நிகழ்வு இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசனிம் பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிகழ்வும் நடந்தது. அப்போது ஒருவர், “தான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இருந்தாலும், அரசியல் என்று வந்தால் கமலுக்கு தான் ஆதரவு அளிபேன். கமல் தான் முதல்வராக வர வேண்டும் என்றும் விரும்புகிறேன். நான் மட்டுமல்ல ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலர் இதை தான் விரும்புகிறார்கள். இதற்கு காரணம், எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு கமல்ஹாசன் தைரியமாக குரல் கொடுத்து வருவது தான்.” என்று கூறினார்.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் பேசியது போல, இந்த நிகழ்வில் பலர் கமல் குறித்து புகழ்ந்து பேசியதோடு, அவரிடம் பரபரப்பான பல கேள்விகளையும் கேட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...