விஜயின் மெர்சல் படத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தது, அப்படத்திற்கு பெரும் விளம்பரமாக மாறியதால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திரையுலகினர் கிண்டலாக பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், இப்படை வெல்லும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி, ”மெர்சல் படத்துக்கு முழு புரோமஷன் செய்தது பாஜக. அது போல், இப்படை வெல்லும் திரைப்படத்துக்கும் எச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம் என்று நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
உதயநிதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியிருப்பதோடு, உதயநிதியின் பேச்சுக்கு எச்.ராஜா பதிலடி கொடுக்கும் விதத்தில் ட்விட்டரில், “ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்” என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் பேச்சுக்கு எச்.ராஜா உடனடியாக பதில் தெரிவித்துள்ளதால், இப்படை வெல்லும் படமும் நல்லபடியாக ஓடும், என்று உதயநிதி தனது நண்பர்களிடம் கூறி வருவதோடு, இந்த விஷயத்தால் குஷியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...