ஐ டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சதீஷ் சந்திரா பாலேட் தயாரித்துள்ள படம் ‘143’. காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது ஐ லவ் யு என்கிற வார்த்தைகளின் சுக்கமே 143. இந்த தலைப்பு இதுவரை இன்றைய தலைமுறை இயக்குநர்களால் கண்டுகொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குநர் ரிஷி.
இப்படத்தை இயக்குவதோடு ஹீரோவாகவும் நடிக்கும் ரிஷிக்கு ஜோடியாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திர ஆகிய இருவர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சுதா, ராஜசிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லை சிவா, மோனா, முண்டாசுப்பட்டி பசுபதி மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
ராஜேஷ் ஜே.கே ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஜய் பாஸ்கர் இசையமைக்க, கபிலன் வைரமுத்து, அறிவுமதி, சினேகன், கபிலன், மதுரா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். மணிமொழியன் கலைத்துறையை கவனிக்க, தீப்பொறி நித்யா ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்துள்ள இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வை பணியை பிரபாகரன் கவனிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநரும் ஹீரோவும் சதீஷ் சந்திரா பாலேட் கூறுகையில், “காதல், காமெடி, பேமிலி செண்டிமெண்ட் கலந்த ஒரு கலவைதான் இந்த 143. காதல் படம் என்றாலே ரசிகர்களிடையே ஒரு தனி ரசனை இருக்கும். அப்படி ரசிக்கும் படியான காதல் கதை தான் இது. கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும். எனக்கு அப்பாவாக விஜயகுமார் நடித்திருக்கிறார் அந்த அப்பா செண்டிமெண்ட் காட்சிகள் அனைத்து இளைஞர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
அமாவாசை அன்று பிறந்த நாயகன் கார்த்திக் (ரிஷி) பெளர்னமி அன்று பிறந்த நாயகி மது (பிரியங்கா ஷர்மா) இவர்கள் காதலுக்கு வில்லனாக சூரியன் (ராஜசிம்மன்). இப்படி மூன்று கதாபாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதை ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும்.” என்றார்.
இப்படம் இம்மாதம் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...