ஒரு காரியத்தில் முழு மூச்சாக இறங்கி , உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதற்கு சமீபத்தைய உதாரணம் பிரபல V J ரம்யா சுப்ரமணியன். பிரபல V J, சமூக ஆர்வலர் என்ற பல முகங்கள் கொண்டுள்ள இவர் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர்.
சமீபகாலமாக அவர் பவர் லிப்ட்டிங்கில் (Power Lifting) ஈடுபடுவதற்கு பயிற்சி பெற்று வந்தார். பல மாதங்கள் பயிற்சிக்கு பிறகு சமீபத்த்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 'Dead Lifting' போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
இது குறித்து ரம்யா பேசுகையில், ”கடந்த சில மாதங்கள் ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்துள்ளது. என்னால் இந்த 'Power Lifting' போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகங்கள் எனக்குள் இருந்தன. ஆனால் கடும் பயிற்சியினாலும், உழைப்பாலும் இந்த பதக்கங்களை வென்றுள்ளேன். நான் வாழ்வில் எது செய்ய நினைத்தாலும் என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...