ரசிகர்களே வேண்டாம் என்று கூறி அஜித்குமார், ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டாலும், அவரது ரசிகர்கள் வழக்கம் போல அவரது படம் ரிலீஸின் போது பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பு என்று அமர்க்களப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், கும்பகோணத்தில் நடிகர் அஜித்குமாருக்கு அவரது ரசிகர்கள் அவருக்கு சிலை வைப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். 7 அடி உடைய, வெண்கலத்தினால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ரத்த தானம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் சிலை வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...