விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ரம்மி’ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.கே இயக்கும் அடுத்த படத்திற்கு ‘கதாயுதம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் படம் இது.
ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் குருசோமசுந்தரம். துருவங்கள் 16 படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் ‘கதாயுதம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக இந்திய பாக்கிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
வசனம் - மோநா.பழனிச்சாமி, ஒளிப்பதிவு - ஞானம், இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - கபிலன், மோநா.பழனிச்சாமி, எடிட்டிங் - சசிகுமார்.ஜி, கலை - ஆர்.விஜயகுமார், நடனம் - பிருந்தா, சிவராக் சங்கர்,
ஸ்டண்ட் - சக்திசரவணன், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.ஆனந்த்ராஜ், கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் - பாலகிருஷ்ணன்.கே
படம் பற்றி இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும், அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...