கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்கள் பலரது சர்சையான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதில் நடிகை அனுயாவின் புகைப்படங்களும் இருந்தது.
‘சிவா மனசுல சக்தி’, ‘நண்பன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது. இந்நிலையில் டிவிட்டரில் இருந்து ஆபாச படத்தை நீக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து நடிகை அனுயா, பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சியில் அனுயா பங்கேற்ற பிறகு இந்த ஆபாச புகைப்படங்கள் அதிகமாக பரவுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...