ட்விட்டரில் அரசியல் பேசி வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது தனது அதிகாரப்பூர்வ அரசியல் பிரேவேசத்தை அற்வித்துவிட்டார். அதற்காக அவர் உருவாக்கியுள்ள மையம் விசில் அப்பை நேற்று முன் தினம் அறிமுகப்படுத்தியவர், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் தயாராகி வருகிறார். இருப்பினும் தான் தொடன்கியுள்ள கட்சியின் பெயரை அவர் அறிவிக்காததோடு, பெயர் முக்கியம் இல்லை, என்றும் கூறிவிட்டார்.
இந்த நிலையில், சமீபகாலமாக சமூக வலைதலங்களில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசி வரும் நடிகை கமல்ஹாசனுடன் இனைந்துள்ளார்.
சமீபத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்த நடிகை கஸ்தூரி, அவரது கட்ச்ஹியில் சேர இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இது குறித்து கஸ்தூரியிடம் கேட்டதற்கு, “நான் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. இப்போது கமல்ஹாசன் கட்சியில் சேரப்போவதாக பேசுகிறார்கள். பிறந்தநாளையொட்டி கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் நான் எடுத்துவிட மாட்டேன். அரசியல் என்பதை கெட்டவார்த்தையாக பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது. அரசியல்வாதிகள் அந்த மாதிரி ஆகிவிட்டார்கள். நான் சாதாரண பெண். அரசியல்வாதி கிடையாது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். சில நல்லவர்கள் தற்போது புதிய அரசியல்வாதிகளாக உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ராமராக இருக்க ஆசைப்படவில்லை. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அணில் மாதிரி இருந்தால்போதும் என்று நினைக்கிறேன்.
தமிழக மக்கள் சிலர் தீக்குளித்து இறந்து இருக்கிறார்கள். அந்த நெருப்பை பார்த்து என் போன்றவர்கள் வயிறு எரிகிறது. தமிழகத்தில் நல்ல தொரு மாற்றம் வர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் மக்களின் அணுகுமுறைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கமல்ஹாசன் கட்சி தொடங்கி அந்த மாற்றத்தை கொண்டு வந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏதேனும் அரசியல் கட்சியில் சேருவீர்களா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது.
தி.மு.க உள்பட எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டேன்” என்றார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...