இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் 'ஆண்டனி'. அறிமுக இயக்குநர் குட்டிக் குமார் இயக்கும் இப்படத்தில் சண்டைக்கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.
சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது.
மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார். தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
தமிழ் சினிமாவை ஆண்டனி அடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...