2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தி படப்புடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. நடிகர் சிவகுமார் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 5 நாட்கள் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பு, பிறகு 40 நாட்கள் தொடர்ந்து தென்காசியில் நடைபெற உள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல் நடிக்கிறார்.
பட துவக்க விழாவில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா, இசையமைப்பாளர் D.இமான், 2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...