தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அட்லீக்கு, தமிழ்ஹ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆப்பு வைத்திருப்பது தான் தற்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் நியூஸ்.
வெற்றி படங்களாக இருந்தாலும், அட்லீ இயக்கும் படங்கள் அனத்தும், ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான சில படங்களின் காப்பியாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் வெளியான மெர்சல் படமும் இதே சர்ச்சையில் சிக்கியது.
இந்த நிலயில், இயக்குநர் அட்லி அவர்கள் மீது மூன்று முகம் திரைப்படத்தின் ரீமேக் உரிமம் (Remake) பெற்றுள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் அளித்த புகாரின்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இயக்குநர் அட்லி அவர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
இந்த நோட்டீஸுக்கு இதுவரை அட்லீயிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லையாம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...