அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நன்றாக ஓடினாலும், மொத்தத்தில் படத்தால் பலருக்கு பெரிய நஷ்ட்டம் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளரிடம் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கேட்க அவரோ அஜித்திடம் கேட்டிருக்கிறார்.
படம் எதிமறையான விமர்சனத்தை சந்தித்ததால், பிரச்சினயை பெரிதாக்க விரும்பாத அஜித், இழப்பீடாக தனது அடுத்த படத்தின் தயாரிப்பையும் விவேகம் தயாரிப்பாளருக்கே கொடுத்திருக்கிறாராம்.
கால்ஷீட் கொடுத்தாலும் படத்தை தயாரிக்க பணம் இல்லை என்று கூறிய தயாரிப்பாளர், அப்படி இப்படி, என்று படத்தை தொடங்க பைனான்ஸை ரெடி பண்ணாலும், அஜித்துக்கு குறவான சம்பளத்தையே கொடுப்பேன் என்று கராராக கூறிவிட்டாராம். வேறு வழி தெரியாத அஜித், விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்பதால், தயாரிப்பாளரின் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஓகே சொல்லிவிட்டாராம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...