லேடி டீம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி தயாரித்துள்ள படம் ‘காத்திருப்போர் பட்டியல்’. டி.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் சச்சின் மணி ஹீரோவாக நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்துள்ளார். மேலும், அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ராயன், மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், அருண்ராஜா காமராஜ், சித்ரா லட்சுமணன், சூப்பர் குட் சுப்ரமணி, பாவா லட்சுமணன், முத்துக்காளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – டி.ராஜசேகர், ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – சீன் ரோல்டன், பாடல்கள் – யுகபாரதி, அருண்ராஜா காமராஜ், ஜி.கே.பி., படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, நடனம் – ஷோபி, நோபிள், சண்டை பயிற்சி – எம்.கணேஷ், ஸ்டில்ஸ் – ராஜ், மக்கள் தொடர்பு – நிகில்.
இந்தப் படத்தில் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (நவ.12) மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர், நடிகர் மனோஜ்குமார், நடிகை சுஜா வாருணி, இயக்குநர் பிரவீன்காந்த், மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தின் இசையை நடிகர் விஷால் வெளியிட, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுக் கொண்டார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...