ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபு , S.R.பிரகாஷ் பாபு தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அருவி. படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பையும். சமூக வலைதளங்களில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
நன்கு அலங்காரம் செய்த பெண் கையில் துப்பாக்கியோடு இருப்பது போல் அருவி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தது. இந்த போஸ்டர் வெளியான சிலநிமிடங்களில் ‘பாரத மாதா’ கையில் துப்பாக்கியோடு இருக்கிறார் என்று சிலர் ட்விட்டர் முதலிய சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்ய அது முதல் தொடங்கியது இதை பற்றிய விவாதம். இதை தொடர்ந்து ஒரு பெண் புகைப்பிடிப்பது போல மீண்டும் ஒரு புகைப்படம் அருவியில் இருந்து வந்தது. ‘பெண் புகைபிடிக்கும்’ அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்க. மேலும் சர்ச்சை கிளப்பும் வகையில் அருவி பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு இருப்பது போல் ஒரு போஸ்டர் வெளிவந்தது.
டீஸரை பற்றிய அறிவிப்பை அந்த போஸ்டரின் மூலம் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இந்த சர்ச்சை நின்று போவதற்கு முன்னரே அருவி டீஸர் சமூகவலைதளங்களில் சென்ற வியாழன் அன்று வெளிவந்து மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக படத்தில் தான் அதிக பீப் காட்சிகள் இடம்பெறும். ஆனால் அருவி டீஸரே பல இடங்களில் பீப்புடன் வெளிவந்துள்ளது. டீஸரில் தீவிரவாதி அருவியை விசாரிக்கும் அதிகாரி “அல்லுமாவா.... மாவோஸ்டா... நக்ஸசல்பாரியா?” என்பது போலும். டீஸரின் முடிவில் அருவி “கை வை பார்ப்போம்“ என்று கூறுவது போல் டீஸர் முடிகிறது. டீசரில் இடம்பெற்ற கை வை பாப்போம் என்ற வசனத்தை எல்லோரும் ட்விட்டரில் ஹாஷ் டேகாக பதிவிட்டு வருகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள அருவி டீஸர் மற்றும் பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் இதை பார்த்துள்ளனர்.
வழக்கமாக தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் படங்கள் தான் யூடியுபில் நம்பர்-1 என்ற ட்ரெண்டை பிடிக்கும். தற்போது வெளிவந்துள்ள அருவி டீஸர் Youtube Indiaவில் நம்பர் ஒன்றாக டிரண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் நடத்திய சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட பிரபல எழுத்தாளர்கள் , சினிமா ஆர்வலர்கள் , விமர்சகர்கள் என பலரும் தங்களுது சமூக வலைதள பக்கத்தில் அருவியை பாராட்டி எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அருவியை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அருவி படத்தின் ட்ரைலர் வருகிற 16 தேதியும் , படம் வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...