தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கூறியுள்ள செக்ஸ் புகார், திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகள் குறித்து கூறி பரபரப்பை ஏற்பச்டுத்தி வரும் நிலையில், தனுஷ் நடித்த முதல் இந்தி படத்தில் அவரது தோழியாக நடித்த இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர், தனக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லை குறித்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ‘வீர் தி வெட்டிங்’ படத்தில் நடித்து வரும் ஸ்வரா பாஸ்கர், இது குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் புதிதாக நடிக்க வந்தபோது, அவுட்டோர் ஷூட்டிங்கில் ஒரு இயக்குனர் எனக்கு தொந்தரவு கொடுத்தார். இரவும், பகலும் என்னை தொடர்ந்தார். காட்சி பற்றி பேச வேண்டும் என்று ஓட்டல் அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது குடிபோதையில் இருந்தார்.
படப்பிடிப்பு தொடங்கி ஒரு வாரத்திலேயே காதல் பற்றியும், செக்ஸ் குறித்தும் ஒருநாள் இரவு சேர்ந்து இருப்பது பற்றியும் என்னிடம் பேசத் தொங்கினார். குடித்துவிட்டு என் அறைக்கு வந்து அவரை கட்டிப்பிடிக்கும்படி தொந்தரவு செய்தார். அவருக்கு பயந்து மேக்கப் போட்டதும் என் அறை விளக்குகளை அனைத்துவிடுவேன். இருட்டிலேயே மேக்கப் கலைப்பேன். அவர் வந்துவிடுவாரோ என்ற பயம் தான் அதற்குகாரணம்.
படத்தின் நிர்வாக தயாரிப்பாளரிடம் இதுபற்றி புகார் செய்தேன். 2 வாரம் தொந்தரவு இல்லை. மீண்டும் பழைய கதையை தொடங்கினார். படவாய்ப்பு பற்றி கவலைப்படக்கூடாது. போனால் போகட்டும். ஆனால் தவறான தொடர்புக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பது எனது அறிவுரை” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...