‘ராமர்’ படத்தை இயக்கிய வருண் ஆதிராஜா, பப்ளிக் ஸ்டாரை ஹீரோவாக வைத்து இயக்கும் புதிய படத்திற்கு ‘காளியாட்டம்’ என்று தலைப்பு வைத்துள்ளார். கிங் பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே.அயோத்தி தயாரிக்கும் இப்படத்தில் பப்ளிக் ஸ்டாருக்கு ஜோடியாக சமீரா நடிக்கிறார். இவர்களுடன்
அனைத்து கதாபாத்திரங்களிலும் 50க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.
ரவுடிகளின் ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ், போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள், இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் இப்படத்தில் சொல்லுகிறார்களாம்.
இ.ஜெ.நெளட்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரசாத் நிக்கி இஐயமைக்கிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்ய, ஆக்ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ராபர்ட் நடனம் அமைக்க, மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வருண் ஆதிராஜா இயக்குகிறார்.
சென்னையில் தொடர்ந்து 40 நாட்கள் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை, ஊட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...