ஹீரோவாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடம் ஒன்றில் நடிக்க உள்ளார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார்.
டிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர். அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘டிராபிக் ராமசாமி’.
இதில் கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள்.
கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப், ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகும் விஜய் விக்ரம், பூனாவில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்துவிட்டு, 5 ஆண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘ஹரஹர மகாதேவகி’ புகழ் பாலு இசையமிக்கிறார். பிரபாகர் எடிட்டிங் செய்ய, ஏ.வனராக் கலைத்துறையை கவனிக்க, அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர்.
இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஈரோடு மோகன் என்பவர் முதல் முறையாக தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...