ஒரு படம் 100 நாட்கள் ஓடிய காலம் மாறி, தற்போது ஒரு வாரம் ஓடுவதே பெரிய விஷயமாகிவிட்டது. அதிலும் முன்னணி ஹீரோக்கள் படம் என்றால், முதல் மூன்று நாட்களின் வசூலை வைத்தே அப்படம் வெற்றியா அல்லது தோல்வியா என்று கணித்து விடுகிறார்கள்.
இந்த நிலையில், முதல் மூன்று நாட்கள் என்பது மாறி, தற்போது முதல் நாள் வசூலை வைத்தே, ஒரு படம் தேறுமா, தேறாத என்று கணிக்கப்படுவஃதாகவும், அப்படி முதல் நாளில் நல்லபடியாக வசூல் செய்த படங்களே, லாபம் ஈட்டி கொடுப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் முதல் நாள் அதிகமாக வசூலித்த டாப் 5 படங்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அஜித், விஜய், ரஜினிகாந்த் இடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் யார் முதலிடம் பிடித்துள்ளார்களோ அவர்கள் தான் தமிழக பாக்ஸ் ஆபிஸ் கிங்காம்.
இதோ அந்த பட்டியல்:
மெர்சல்- ரூ 22 கோடி
கபாலி- ரூ 21.5 கோடி
விவேகம்- ரூ 17 கோடி
வேதாளம்- ரூ 15.5 கோடி
தெறி- ரூ 13 கோடி
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...