சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் பெண் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். சில மாதங்களுக்கு முன் முகநூல் மூலமாக அறிமுகமான மிதுன் சீனிவாசன் என்ற பொறியியல் கல்லூரி மாணவனுடன் அப்பெண் நட்பாக பழகி வந்துள்ளார். மிதுன் பிரபல சர்ச்சை நடிகை புவனேஸ்வர்யின் மகன் ஆவார்.
இந்த நிலையில் தன்னுடன் பழகி வரும் மிதுன் பிரபல சா்ச்சை நடிகையின் மகன் என்பது மாணவிக்கு தெரிய வந்துள்ளது. மேலும் மிதுன் மீது இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்கு இருப்பதையும் அந்த பெண் அறிந்துள்ளார்
இதனை தொடர்ந்து மிதுன் சீனிவாசனுடனான பழக்கத்தை மாணவி முறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட மிதுன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார்.
அதனை மாணவி ஏற்க மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்ற மிதுன் தன்னை காதலிக்கவில்லை என்றால் நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதி நிலை தான் உனக்கும் ஏற்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...