சில முன்னணி நடிகர்கள் தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, படப்பிடிப்பு முடிந்த பிறகு பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதில் நடிகர் விஜய் முன்னணியில் இருப்பவர் என்று கூட சொல்லலாம்.
தனது ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பரிசு கொடுத்துவதோடு, அவர்களுக்கு விருந்து வைத்தும் அசத்தும் விஜய், தற்போது அதே பாணியில் ‘மெர்சல்’ படக்குழுவினரை மெசலாக்கியுள்ளார். ஆம், மெர்சல் படத்தில் பணியாற்றிய சுமார் 200 பேருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார் விஜய்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...