Latest News :

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறுமிகமாகும் தெலுங்கு வாரிசு!
Friday November-17 2017

மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளுமான நிஹாரிகா  கோனிடேலா  தற்போது தமிழ் திரை உலகில் அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் " ஒரு நல்ல  நாள் பாத்து சொல்றேன் '' படத்தில் நிகாரிகா கோனிடேலா  கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார்.

 

இப்படடம் குறித்து நிஹாரிகா பேசுகையில், “தமிழில் எனது முதல் படமே இவ்வளவு பெரிய படமாக  அமைந்ததில்   பெரும் மகிழ்ச்சி. சிறந்த அணி , சிறப்பான கதை எனக்கு கிடைத்துள்ளது . தமிழ் மொழி மீது என்றுமே பற்றுள்ளவள் நான். எனது குடும்பத்தில் எல்லோருமே நன்றாக தமிழ் பேசுவார்கள். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது அரிது. அவர்களுடன் பணிபுரிந்து ஒரு அருமையான அனுபவம். இப்படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் அல்ல. எனது இந்த கதாபாத்திரம் இரண்டு பெயர்களில் வரும். ஏன் இரண்டு பெயர்கள் என்பதை படம் பார்க்கும் பொழுது நீங்களே அறிவீர்கள். எனது குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஆதரவும், ஊக்கமும் அளவற்றது. இது போன்ற ஒரு குடும்பம் அமைந்துள்ளதால் நான் பெரிய அதிர்ஷ்டசாலி. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ' படத்தையும் எனது கதாபாத்திரத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

 

இப்படத்தை 7C's  Entertainment Private Limited ' நிறுவனம்  மற்றும் 'Amme Entertainment ' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

Related News

1286

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் விநாயகராஜ்!
Saturday December-21 2024

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...

சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிவி பிரகாஷ் குமார்!
Saturday December-21 2024

முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...

”பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல” - சூர்யா உருக்கம்
Friday December-20 2024

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...

Recent Gallery