மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள துல்கர் சல்மான், தமிழிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் நடிக்கும் அடுத்த தமிழ்ப் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இவர் விஜய் மில்டனிடம் உதவு இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.
படம் குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறுகையில், “இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுது தான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பாடல் மனதிற்கு வந்தது. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை.
மிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை. அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என உறுதியாக நம்புகிறேன். அவருக்கு ஜோடியாக நடிக்க ரீத்து வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குனர் டி. சந்தானம். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...