சினிமா தயாரிப்பிலும், அதன் விளம்பர யுக்திகளிலும் எல்லோரையும் திரும்பி பார்க்க செய்து கொண்டிருக்கும் '24 AM ஸ்டுடியோஸ்' நிறுவனம் தற்பொழுது சினிமா விநியோகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இதற்காக, 24 PM என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, “சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பாதிக்கவுள்ளோம். 'Axess Film Factory' நிறுவனத்தின் அருள்நிதி நடிக்கும் ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிக்கும் ’ராட்சஸன்’ ஆகிய படங்களோடு எங்கள் விநியோகம் பயணத்தை தொடங்கவுள்ளோம்.
டில்லி பாபுவோடு இணைந்து எங்கள் விநியோகத்தை ஆரம்பிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. சமீபத்தில் 'மரகத நாணயம்' என்ற வசூலை குவித்த படத்தை தயாரித்த அவருக்கு இது போல மேலும் நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் உள்ளது. விநியோகத்துறையிலும் நாங்கள் கடுமையாக உழைத்து சாதிக்க முனைப்போடு உள்ளோம்.” என்று தெரிவித்தர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...