நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான வெற்றி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணிவாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.
மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் தயாரித்து, இயக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
அப்பாவை பின்பற்றி தயாரிப்பு, இயக்கம் என்று களமிறங்கும் காந்தி மணிவாசகம், கதை அமைப்பிலும், காமெடி, கமர்ஷியல் என்ற அவரது அப்பா பார்முலாவையே இவரும் கையிலெடுக்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...