திரைப்படங்களை தவிர வேறு எதிலும் நடிகர் அஜித்தை பார்க்க முடியாது. ஏன், அவர் நடிக்கும் படங்களின் விழாக்களில் கூட அஜித் கலந்துக்கொள்ள மாட்டார். அப்படி பட்டவர் பணத்திற்காக நடத்தப்படும் நட்சத்திர கலை விழாவில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியுள்ள நாசார், விஷால் மற்றும் கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் குழு, பல்வேறு வகையில் நிதி திரட்டி வருகிறன்றனர். அந்த வகையில்,
மலேசியாவில் விரைவில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளனர். இதில் ரஜினி, கமல் கலந்துக்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜய், அஜித்திடம் இதுக்குறித்து பேச்சு வார்த்தை நடக்க, எப்போதும் அஜித் இதுப்போன்ற விஷயங்களுக்கு எல்லாம் உடனே நோ சொல்லி அனுப்பிவிடுவார்.
ஆனால் இந்த முறை ‘சொல்றேன்’ என்று பதில் அளித்துள்ளாராம். அதனால், அவர் இந்த விழாவில் நிச்சயம் பங்கேற்பார், என்று நடிகர் சங்க நட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...