’தப்பாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், நடிப்பில் பல படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றது. அதே சமயம் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல், எந்த வேடமாகவும் நடிக்க ரெடி, ஆனால் அந்த படமும் அதில் நடிக்கும் ஹீரோவும் மக்களுக்கு பரீச்சையமானவர்களாக இருக்க வேண்டும், என்று தனது விருப்பத்தை பப்ளிக் ஸ்டார் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது அவரது விருப்பம் நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது. ஆம், பப்ளிக் ஸ்டார் விரைவில் பிரபல இயக்குநரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், சினிமாக்காரர்களுக்கு பல நல உதவிகளை செய்து வரும் பப்ளிக் ஸ்டார், சினிமாத்துறையை சாராதவர்களுக்கும் பல்வேறு உதவுகளை செய்து வருகிறார்.
அதன்படி, பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டனுடன் இணந்து, ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர, அவர்களுக்கு தொழில் உதவி செய்துள்ளார்.
நடிகர் இமான் அண்ணாச்சியின் இணைந்த கைகள் அறக்கட்டளை சார்பில் இந்த உதவுகளை பப்ளிக் ஸ்டார் செய்துள்ளார். இதில், தள்ளு வண்டியில் உணவகம் வைத்திருப்பவர்களுக்கு, அத்தொழிலுக்கு தேவையான பாத்திரம், வண்டி உள்ளிட்ட முழுமையான உபகரணங்கள், ஜூஸ் கடை நடத்துவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கிய பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், பல ஏழை மக்களை சிறு வியாபாஇகளாக்கியுளார்.
இப்ப புரியுமே அவருக்கு எதற்காக ’பப்ளிக் ஸ்டார்’ பட்டம் கொடுக்கப்பட்டது என்பது!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...