அஜித் என்றாலே அமைதியானர், அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பார், தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டார். குறிப்பாக கூட்டத்தை சேர்த்து அரசியல் ஆதாயம் தேட மாட்டார். என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அஜித் குறித்து யாரும் அறியாது ஒரு விஷயம் தற்போது வெளியே கசிந்துள்ளது.
மகாலிங்கம் இயக்கத்தில் ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விசிறி’. இதில் ரிமோனா ஸ்டெப்னி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழக பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார், பாடலாசிரியர் மதன்கார்க்கி, நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ஆரி, விசிறி திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறியவர், அஜித் குறித்த ரகசியத்தையும் உடைத்தார்.
தமிழக அரசியலில் நடிகர் அஜித் பெயரை நாம் இன்னும் சேர்க்கவில்லை. அவரது அரசியல் வருகைக்கு முன்பு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுடன் தயார் நிலையில் உள்ளார். என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு, தமிழகத்தை எவ்வாறெல்லாம் மேம்பாடு அடையச் செய்யலாம் என்றும் ஆலோசித்து வருவதாக தனக்கு தகவல் கிடைத்ததாக நடிகர் ஆரி கூறினார்.
இதனால் அஜித் அரசியல் வருகை குறித்து, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...