கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாராவுக்கு சமீபத்தில் வெளியான ‘அறம்’ தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்துக் கொடுத்திருக்க, தற்போது அந்த படத்தினாலேயே அவர் புது சிக்கலில் சிக்கியுள்ளார்.
வெற்றிகரமாக ஓடிக்கொக்ண்டிருக்கும் ‘அறம்’ படத்தின் கதை தன்னுடையது என்று கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், மலையாளத்தில் இதேபோல் ஒரு படம் பல வருடங்களுக்கு முன் வந்துள்ளது, அந்த படக்குழுவும் இப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், நயன்தாராம், இயக்குநர் கோபி ஆகியோர் மீது வழக்கு பாயலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்படி வழக்கு பாய்ந்தால் நயந்தாரா நீதிமன்ற கூண்டில் ஏற்றப்படுவார்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...