‘தெறி’, ‘மெர்சல்’ என்று விஜயை வைத்து தொடர்ந்து இரண்டு படங்கள் இயக்கிய அட்லீ, அடுத்ததாகவும் விஜயுடன் தான் இணயப்போவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து விஜய்க்காகவே படங்கள் இயக்கி வருவதால் அட்லீ மீது, விஜய் அஜித் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலயில், அட்லீயுன் காற்று தற்போது அஜித் பக்கம் வீச தொடங்கியுள்ளது. அதாவது, அஜித்தை வைத்தும் படம் இயக்க தான் விரும்புவதாக அட்லீ விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு, அஜித்துடன் விஜயையும் வைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தாலும், அதை சவாலாக ஏற்றுக்கொள்வாராம்.
இது குறித்து அட்லீ அளித்த பேட்டி ஒன்றில், “நடிகர்களுக்காக நான் எழுதிய கதைகள் தான் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’. ராகங்கள் ஏழு இருப்பது போல், கதைகளும் ஒரு வட்டத்துக்குள் தான் இருக்கின்றன. என் படங்களுக்கான கதைகளை மக்களிடம் இருந்து தான் உருவாக்குகிறேன். எனக்கு என்ன தகுதி என்று நினைத்து சம்பளம் கொடுக்கிறார்களோ அதைத்தான் வாங்குகிறேன்.
ரீமேக் செய்வதாக இருந்தால், ‘பாட்ஷா’ படத்தை ரீமேக் செய்வேன். அதுவும் ரஜினிகாந்தை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் இணைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தால், அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு செய்வேன். அதுபோல் விஜய், அஜித்குமாரை இணைத்து படம் இயக்கக் கேட்டாலும் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
அட்லீ இப்படி அஜித் குறித்து பேச தொடங்கியிருப்பதால், அஜித் அரசிகர்களுக்கு அவர் மீது இருந்த கோபம் குறைகிறதா, என்று பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...