கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘புகழேந்தி எனும் நான்’ அறிவிக்கப்பட்ட நாள் முதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்து வரும் நிலையில், இப்படத்தின் ஹீரோயினாக பிந்து மாதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பிந்து மாதவியிடம் கேட்டதற்கு, “எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் 'புகழேந்தி எனும் நான்'.
இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, புகழேந்தி எனும் நான் படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும். டிசம்பரில் தொடங்கும் இந்த புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...