விஷ்னு மஞ்சு நடிக்கும் ’குறள் 388’-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் வெளியிட்டார்.
பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சமூக வலைதளங்களை கலக்கிய குறள் 388 படத்தை அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழில் இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்திருந்த சுரபி குறள் 388 - ன் கதாநாயகியாக நடிக்கிறார். தவிர பிரபல நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர்.
தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திரு வள்ளுவர் எழுதிய குறளில் 388 வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல் வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதையாகும்.
விஷ்னு மஞ்சுவிற்கு குறள் 388, தமிழில் நல்ல ஒரு அறிமுகபடமாக அமையும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு ரமேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சுதீர் குமார் புடோட்டா படத்தை தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...