சினிமா துறையில், வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதே சமயம், தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகள் பற்றி தைரியமாக கூறிவரும் நடிகைகள், சம்மந்தப்பட்ட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெயரை மட்டும் கூறுவதில்லை.
இந்த நிலையில், ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புக்காக 5 மணி நேரம் தயாரிப்பாளர் முன் நிர்வாணமாக நின்றேன் என்று பிரபல நடிகை ஜெனிபர் லாரன்ஸ் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் கதாநாயகி ஜெனிபர் லாரன்ஸ், இவர் ‘சில்வர் லிங்க்ஸ் ஃப்ளேபுக்’ என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம். அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்துக் கொள்வாராம்.
இப்படி பல கசப்பான சமபவங்களை நான் சந்தித்தேன் என சமீபத்தில் ஒரு நிகழ்வில் வெளிப்படையாக கூறினார் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...