‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ என்று மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு, விஜய், அஜித், விஜயகாந்த் என்று முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அப்படி இருந்தும் அவர் படம் எடுத்து பல வருடங்கள் ஆவதுடன், அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திகார்’ என்ற படமும் ரிலீஸ் ஆவதில் சிக்கலை சந்தித்து வருகிறது.
பேரரசுவின் இத்தகைய நிலைக்கு, ஒரு பென் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை தான் அவர். அந்த நடிகை மீது பேரரசு கொண்ட காதலால் தான் தனது மனைவியையும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
மேலும், எப்போதுன் அந்த நடிகையின் காதலுக்கே பேரரசு முக்கியத்துவம் கொடுத்து வர்வதாலேயே,முன்பு போல அவரால் சினிமாவில் ஈடுபாடு காட்ட முடியவில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...