‘துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் ‘இரும்புத்திரை’, ‘சண்டக்கோழி 2’ என இரன்உ படங்களில் நடித்து வருகிறார்.
இதில், அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘இரும்புத்திரை’ முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தை 2018 பொங்கல் பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் கேரள ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விலை போயுள்ளதாகவும், அதனை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றி இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
விஷல் தனது விஷல் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரிக்கும் ‘இரும்புத்திரை’ தமிழ் மற்றும் தெலிங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...