நியூஸ் 7 தமிழில் ‘மக்கள் மனசுல யாரு’ என்ற மாபெரும் கருத்துக்கணிப்பின் முடிவுகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.
நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தும் ‘மக்கள் மனசுல யாரு’ மாபெரும் கருத்துக்கணிப்புக்கான முடிவுகள் இந்தவாரம் 27, 28, 29, 30மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...