மதுரையைச் சேர்ந்த அசோக் குமார், நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் உறவினா். சசிகுமாரின் புரொடக்ஷன் நிறுவனத்தைக் கவனித்துவந்த இவர், கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்புச்செழியன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டியதால் வேறுவழியின்றி தற்கொலை செய்யும் முடிவிற்கு தள்ளப்பட்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தாணு அசோக் குமாரின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும், அனைவரும் கூறுவது போல் அன்புச்செழியன் கெட்டவர் இல்லை என்றும் அவரைப் போன்றவர்களை நம்பித் தான் சினிமா துறை இயங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். தான் சசிகுமாரை வைத்து படம் எடுத்து அதில் வரும் பணத்தை அசோக் குமாரின் குடும்பத்திற்கு கொடுக்க போவதாக கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அமீர் வேண்டுமென்றால் தாணுவை சாகச் சொல்லுங்கள், நான் படம் எடுத்து அதில் வரும் பணத்தை அவர் குடும்பத்திற்கு தருகிறேன் என்றார்.
அமீரின் இந்த பதிலடியால் தாணு தரப்பு மிரண்டு போயுள்ளார்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...