சூர்யா நடித்த 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதும் கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷின் 3, விஷாலின் பூஜை, விஜய்யின் புலி, சூர்யாவின் சிங்கம் 3 (சி3), அஜித்தின் வேதாளம் என்று மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படங்களைத் தொடர்ந்து சினிமா வாய்ப்பும் இல்லாமல் இருந்த இவருக்கு தந்தை கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கமலுக்கு காலில் அடிப்பட்டதால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இப்படத்தைத் தொடர்ந்து இரு படங்களில் ஒப்பந்தமாகயிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், தன்னுடைய லண்டனைச் சேர்ந்த காதலன் மைக்கேல் கார்சலுடன் தனது ஓய்வு நேரத்தை கழித்து வரும் ஸ்ருதி, தனது தாய் சரிகாவிடம் மைக்கேலை அறிமுகம் செய்து வைத்துள்ளார். சரிகாவும், தனது மகளின் காதலன் மைக்கேலுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்துள்ளார். தற்போது ஸ்ருதி, மைக்கேல் மற்றும் சரிகா ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், விரைவில் தனது காதலன் மைக்கேல் கார்சலை, ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதற்கான சந்திப்பு இந்த திடீர் விசிட் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...