தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகல் மிக மிக குறைவு தான். அத்தி பூத்தது போல் யாராவது அப்படி நடிக்க வந்தாலும், அவர்கள் நடித்த படம் தோல்வியடைந்து, அவர்கள் காணாமல் போய்விட, வழக்கம் போலவே மும்பை மற்றும் கேரளத்து பெண்களே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருவார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ‘நிபுணன்’ படத்தில் அர்ஜூனின் மனைவி வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஸ்ருதி ஹரிஹரன், ஒரு தமிழ் பெண் ஆவார். ’நிபுணன்’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு பல தமிழ்ப் பட வாய்ப்புகள் வருவதால் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மேலும், தமிழ் பெண்ணான தான் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றிருப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது, என்று கூறியவர், தனதுக்கு நிபுணன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு நன்றியை தெரிவித்ததோடு, அர்ஜூனுடன் இணைந்து நடித்ததில், தான் மற்றட்ட மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘சோலோ’ படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வரும் ஸ்ருதி ஹரிஹரனுக்கு மேலும் பல வாய்ப்புகளும் வந்துள்ளதாம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...