மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் போதை பொருள் விவகாரத்தில் தொடர்புள்ள தெலுங்கு நடிகர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்புடைய இந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரின் அடித்த குறி கோலிவுட் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தி சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்குள் இருக்கும் போதை பார்ட்டிகளை வளைத்துள்ள போலீசார், அடுத்ததாக தமிழ் சினிமாவில் உள்ள போதை பார்ட்டிகளை வளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மது போதைக்கு அடிமையான பல நடிகர்கள் தற்போது அதையும் தாண்டி வேறு விதமான போதைகளில் நாட்டம் கொண்டிருப்பதாகவும், அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் தயார் செய்துள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் விரைவில் கோடம்பாக்கத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...