Latest News :

வெள்ளித்திரை ஹீரோ விஜித் இயக்கி நடித்துள்ள குறும்படம் ‘ஹப்பி நியு இயர்’
Saturday August-05 2017

சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள், தற்போது சாதித்துக் கொண்டிருப்பவர்கள் பலருக்கு குறும்படம் ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்துள்ளது. குறும்படங்களின் அசூர வளர்ச்சியின் காரணமாக முன்னணி நடிகர், நடிகைகள் கூட குறும்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள விஜித், ஒரு குறும்படத்தை தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

 

காதல் மற்றும் ஆக்‌ஷன் குறும்படமாக உருவாகியுள்ள இந்த குறும்படத்திற்கு ‘ஹப்பி நியூ இயர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் மிஸ் தென்னிந்தியா அக்‌ஷரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

இக்குறும்படம் குறித்து பேசிய விஜித், “ஒரே காலனியில் வாழ்ந்து, ஒரு ஆபீஸில் வேலை செய்துதுகொண்டு, ஒருவர் மீது மற்றொவருக்கு ஈர்ப்பு இருந்தும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ள பயப்படும் ஒரு இளஞ்ஜோடியை பற்றிய கதை தான் 'ஹாப்பி நியூ இயர்'. ஒரு டிசம்பர் மதம் 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடியும் கதை இது. இந்த இடர்பட்ட 12 மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பது தன் இந்த குறும்படம். இந்த குறும்படத்தில் காதல்,ஆக்ஷன், திடீர் திருப்பங்கள் ஆகியவை சரியான கலவையில் இருக்கும்.” என்றார்.

 

'பைரவா' பட புகழ் தவசி ராஜா இப்படத்திற்கு சண்டை காட்சிகள் அமைத்துள்ளார். மஸ்தான் காதர் இசையில், ராஜேஷ் நாராயணன் ஒளிப்பதிவில், வித்து ஜீவின் படத்தொகுப்பில் 'ஹாப்பி நியூ இயர்' உருவாகியுள்ளது.

 

அழகான காதல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளோடு, திருப்புமுனைக் கொண்ட கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை வெகுவாக கவரும் விதத்தில் அமைந்துள்ளதாக கூறும் விஜித், 'ஹாப்பி நியூ இயர்' குறும்படத்தின் தொடர்ச்சி பாகங்களாக 'ஹாப்பி வாலெண்டைன்ஸ் டே' மற்றும் 'ஹாப்பி தீபாவளி' போன்ற குறும்படங்களை இதே குழுவினருடன் எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

Related News

142

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் விநாயகராஜ்!
Saturday December-21 2024

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...

சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிவி பிரகாஷ் குமார்!
Saturday December-21 2024

முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...

”பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல” - சூர்யா உருக்கம்
Friday December-20 2024

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...

Recent Gallery