அஜித்தின் ‘விவேகம்’ இம்மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாவதை தொடர்ந்து அதற்கு முன்பாகவே தங்களது படத்தை வெளியிட சில முன்னணி ஹீரோக்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயதநிதி நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியிடப்போவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதத்தில், ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்கம், பிரபல பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிப்பது, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளது.
ஆனால், உதயநிதியின் முந்தைய படமான ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் தோல்வியடைந்ததாலும், அவர் ஒரே மாதிரியான படங்களில் நடித்து வருகிறார், என்ற கருத்து நிலவுவதாலும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படவில்லை. இருப்பினும், பார்த்திபனுடன் உதயநிதி இணைந்திருப்பது சிறு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...