ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே தற்போது எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது அஜித்தின் ‘விவேகம்’ படத்தை தான். இம்மாதம் 24 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அஜித்து சிலை வைத்து அவரது ரசிகர்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர், அஜித்துடன் தான் பணியாற்றிய அனுபவத்தை பற்றி பேசும் போது, அஜித் செய்த ஆக்ஷன் காட்சிகள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.
சரவதேச தரத்தோடு, தமிழ் சினிமாவின் முதல் உளவாளி படமாக உருவாகியிருக்கும் ‘விவேகம்’ படத்தில், ‘கேசினோ ராயல்’ (Casino Royale), ‘300 : ரைஸ் ஆப் அன் எம்பயர்’ (300: Rise Of An Empire), ‘தி டிரான்ஸ்போர்ட்டர் ரீபண்டெட்’ (The Transporter Refunded) போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் (Serge Crozon Cazin) நடித்திருக்கிறார்.
அஜித் அணியில் இடம்பெற்ற ஐந்து பேர்களில் ஒருவராக ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ள சர்ஜ் க்ரோசோன் கஜின், தனது அனுபவத்தை கூறுகையில், “விவேகம் போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த கதாபாத்திரத்திற்கான இண்டர்வீயூவில் கலந்து கொண்ட பிறகே இயக்குநர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார். சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின் தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். 'விவேகம்' படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பிய போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதை தெரிந்துக்கொண்டேன். படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர். படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்களை எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும். அருமையாக படமாக்கப்பட்டுள்ள 'விவேகம்' படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள்.” என்றார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...