இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த ராஜபக்சேவை, ஒட்டு மொத்த தமிழர்களும் எமனாக பார்க்கும் நிலையில், சிலர் ராஜபக்சே குடும்ப நபர்களுடன் உறவாடி வருகிறார்கள். அந்த வகயில் இளையராஜாவின் குடிம்பத்தைச் சேர்ந்த பலர் ராஜபக்சே குடும்பத்தோடு உறவாட தொடங்கியுள்ளார்கள்.
இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரனின்மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே அளித்த விருந்தில் பங்கேற்றுளார்கள்.
‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, அப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு நாமல் ராஜபக்சேவை சந்தித்த அவர், நாமல் அளித்த விருந்திலும் கலந்துக் கொண்டுள்ளார்.
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, தமிழர்கள் பரம எதிரியாக பார்த்துக் கொண்டிருக்க வெங்கட் பிரபு போன்றவர்கள் பண ஆசையால், தமிழர் என்பதையும் மறந்து இனப்படுகொலைவாதி ராஜபக்சே குடும்பத்தார் அளித்த விருந்தில் பங்கேற்றதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...